வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து - டிரைவர் படுகாயம்...!


வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து - டிரைவர் படுகாயம்...!
x
தினத்தந்தி 23 April 2022 2:41 PM IST (Updated: 23 April 2022 2:41 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் கார் டிரைவர் படுகாயம் அடைந்து உள்ளார்.

வேடசந்தூர், 

தூத்துக்குடியில் இருந்து கரூருக்கு கரி மூட்டை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை தூத்துக்குடியைச் சேர்ந்த மாடசாமி(வயது 31) என்பவர் ஓட்டி வந்தார்.

திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டியை அடுத்து இன்று காலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கேரளா மாநிலம் கோட்டையத்தில் இருந்து பெங்களுரு நோக்கி அமுல்(32) என்பவர் ஓட்டி வந்த கார் முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி லாரிக்குள் புகுந்து நொறுங்கியது. காரை ஓட்டி வந்த அமுல் ஈடிபாடுகளில் சிக்கிக்கொண்டார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்கள் உதவியோடு காரில் காயத்தோடு இருந்த டிரைவர் அமுலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைசக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story