திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியில்...!


திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியில்...!
x
தினத்தந்தி 23 April 2022 5:45 PM IST (Updated: 23 April 2022 6:08 PM IST)
t-max-icont-min-icon

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

திருவட்டார், 

குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகின்றது.

தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் திற்பரப்பு அருவிக்கு படை எடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அருவிக்கு வந்த  சுற்றுலா பயணிகள் ஆசை தீர குளித்து மகிழ்கின்றனர்.    

மேலும் அருவிக்கு எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றையும் பார்த்து ரசித்தனர். இதுபோன்று  அருவியின் மேல் பகுதியில் உள்ள அணைக்கட்டில் உல்லாச படகு சாவாரியும் செய்து மகிழ்ந்தனர்.


Next Story