நோணாங்குப்பம் படகு குழாமில் க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி சுற்றுலா பயணிகள் வரவேற்பு
நோணாங்குப்பம் படகு குழாமில் ‘க்யூ ஆர்’ கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அரியாங்குப்பம்
புதுவையில் முக்கிய சுற்றுலா தலமாக நோணாங்குப்பம் படகு குழாம் திகழ்கிறது. இங்கு வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்த படியே கடலின் அழகை ரசிப்பார்கள். பாரடைஸ் பீச்சுக்கு சென்று பொழுதை கழிப்பார்கள்.
இதனால் சனி, ஞாயிற்றுகிழமைகளில் சுமார் ரூ.5 லட்சத்திற்கு மேல் வசூலாகும்.
இதுதவிர பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ரூ.10 லட்சத்திற்கு மேல் வருவாய் கிடைக்கும். இதுபோன்ற நேரங்களில் படகு சவாரி செய்ய டிக்கெட் வாங்குவதற்கு சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே டிக்கெட் எளிதில் பெறுவதற்காக வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஏ.டி.எம். கார்டு மூலமாக பணம் செலுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ‘க்யூ ஆர்’ கோடு மூலம் ஸ்கேன் செய்து எளிதில் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story