புதுச்சேரி- கடலூர் சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு
புதுச்சேரி- கடலூர் சாலையில் பள்ளங்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி- கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இந்த நிலையில் விபத்தை தடுக்க தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சிமெண்டு கலவையை கொட்டி பொதுப்பணித்துறையினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். இருப்பினும் சாலையை முழுவதும் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story