கியாஸ் கசிந்து வீ்ட்டில் தீ


கியாஸ் கசிந்து வீ்ட்டில் தீ
x
தினத்தந்தி 23 April 2022 11:55 PM IST (Updated: 23 April 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

வீ்ட்டில் கியாஸ் கசிந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்தது வயதான தம்பதியினர் உயிர்தப்பினர்.

புதுவை சாரம் தென்றல் நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 70). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவருடன் அவரது மனைவியும் வசித்து வருகிறார். இன்று மாலை 4 மணியளவில் மனோகரன் தனது வீட்டில் காபி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். 
அப்போது கியாஸ் கசிவு காரணமாக திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரனும், அவரது மனைவியும் உயிர்பிழைக்க அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார்கள்.
இது பற்றி தகவல் அறிந்த புதுவை தீயணைப்பு நிலைய அதிகாரி முகுந்தன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதற்குள் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story