20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் பேச்சு


20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 24 April 2022 1:21 PM IST (Updated: 24 April 2022 1:21 PM IST)
t-max-icont-min-icon

மக்களோடு மக்களாய் இருந்து மக்கள்பணி செய்பவர்கனிமொழி எம்,பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.


உடன்குடி,

உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து அமைச்சர் தோட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி,மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. 

இக்கூட்டத்திற்கு தமிழக மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது. 

தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்காக உழைக்கின்ற முழு நேர முதல்வராக செயல்பட்டு வருகிறார். நாள் ஒன்றுக்கு24 மணி நேரத்தில் சுமார் 20 மணி நேரம் மக்களுக்காகவே ஓடி ஓடி உழைக்கிறார், அதனால்தான் தமிழகம் இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும், முன்னோடி மாநிலமாக இருக்கிறது. இதைப் போல நமது தொகுதி எம்.பி.கனிமொழி மக்களோடு மக்களாய் இருந்துமக்கள்பணி செய்து வருகிறார். எந்த நேரத்திலும் தொகுதி மக்கள் அவரைச் சந்திக்கலாம். அவரிடம் தொகுதி தேவைகள்பற்றிப் பேசலாம். இப்படி பழகுவதற்கு எளிமையான எம்.பி.யை நாம் இதுவரை பார்திருக்க வே முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

இதில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக உழைத்த 100 தி.மு.க.வினருக்கு தலா ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கினார்.

Next Story