திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்...!
திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்,
குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகின்றது.
தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் திற்பரப்பு அருவிக்கு படை எடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் திற்பரப்பு அருவில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் அருவிக்கு எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றையும் பார்த்து ரசித்தனர்.
Related Tags :
Next Story