அரசு பள்ளி புத்தகங்கள் மாயமான வழக்கு - வட்டார கல்வி அலுவலர் உட்பட 8 பேருக்கு சம்மன்


அரசு பள்ளி புத்தகங்கள் மாயமான வழக்கு - வட்டார கல்வி அலுவலர் உட்பட 8 பேருக்கு சம்மன்
x
தினத்தந்தி 24 April 2022 6:13 PM IST (Updated: 24 April 2022 6:13 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் புத்தகங்கள் மாயமானது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார கல்வி மைய அலுவலகத்தின் வளாகத்தில் இருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றாம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரையிலான சுமார் 12 ஆயிரம் காணாமல் போனதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உதவியாளர் தங்கவேல் மற்றும் கிளர்க் திருநாவுக்கரசு ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்தங்கரை போலீசார், ஊத்தங்கரை முன்னாள் வட்டார கல்வி அலுவலர் மாதேஷ்வரி, தற்போது பணியில் இருக்கும் மாதம்மாள் உள்பட 8 பேருக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story