"மின் தேவையை உணர்ந்து தமிழக அரசு செயல்படவில்லை" - எம்.பி. ரவீந்திரநாத்


மின் தேவையை உணர்ந்து தமிழக அரசு செயல்படவில்லை -  எம்.பி. ரவீந்திரநாத்
x
தினத்தந்தி 24 April 2022 7:07 PM IST (Updated: 24 April 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

கோடையில் மின்சார தேவை அதிகரிக்கும் என்பதை அறிந்து தமிழக அரசு செயல்படவில்லை என்று எம்.பி. ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கோடையில் மின்சார தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து தமிழக அரசு செயல்படவில்லை என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கூறியுள்ளார். 

டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார். தமிழ்நாட்டில் மின்வெட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அதிமுக ஆட்சி காலத்தின்போது தமிழகத்தில் மின்வெட்டு இருந்ததில்லை. தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது என்று கூறினார். மேலும் அவர் மத்திய அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு வரும் காலங்களில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

Next Story