இன்று முதல் குற்றாலம் அருவிகளில் இரவிலும் குளிக்க அனுமதி..!
குற்றாலம் அருவிகளில் இரவிலும் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தென்காசி,
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக குற்றாலம் அருவிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Related Tags :
Next Story