‘தி.மு.க.-சிறுபான்மை இயக்கம் இடையேயான நட்பை யாராலும் பிரிக்க முடியாது’ முதல்-அமைச்சர் பேச்சு
‘சிறுபான்மை இயக்கத்துக்கும், தி.மு.க.வுக்கும் இடையேயான நட்பில் யாராலும் பிரிவை ஏற்படுத்த முடியாது’ என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் நேற்று மாலை நடந்தது. அதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-
சிறுபான்மை இயக்கத்துக்கும், தி.மு.க.வுக்கும், கருணாநிதிக்குமான நட்பு காலம்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் யாரும் களங்கத்தையோ, பிரிவையோ ஏற்படுத்த முடியாது. அண்ணாவையும், கருணாநிதியையும் இணைக்கும் பாலமாக இருந்ததே திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாதான்.
அதுமட்டுமல்ல, பள்ளிக் காலத்தில் கருணாநிதிக்கு உற்ற தோழனாய் இருந்து உதவி செய்தவர் திருவாரூரைச் சேர்ந்த அசன் அப்துல்காதர். கையெழுத்து இதழாக இருந்த முரசொலியை முதலில் அச்சிட்டுக் கொடுத்தவர் திருவாரூரைச் சேர்ந்த கருணை ஜமால். உள்ளூரில் எழுதிக்கொண்டு இருந்த கருணாநிதியை சேலம் மாடர்ன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று மாபெரும் கதை, வசனகர்த்தாவாக அடித்தளமிட்டவர் கவிஞர் கா.மு.ஷெரீப். கருணாநிதியை தனது காந்தக் குரலால் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர் நாகூர் அனீபா.
தமிழர்கள் என்ற உணர்வுடன்...
இப்படி கருணாநிதியின் வாழ்க்கையோடு இணைந்தும், பிணைந்தும் இருந்தவர்கள் அவரது இஸ்லாமிய நண்பர்களே. 1967-ம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தபோது அந்தக் கூட்டணியில் மிக மிக முக்கியப் பங்களித்தவர் காயிதே மில்லத்.
எதிர்க்கட்சியாக இருந்தபோதே சிறுபான்மையினர் உரிமைக்குக் குரல் கொடுத்த கட்சி தி.மு.க.தான். பின்னர் ஆட்சி அமைத்த பின்னர் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்தது.
கருணாநிதி வழியில் இப்போதும் சிறுபான்மையினருக்கான நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். மதம் என்பதும், சமய நம்பிக்கை என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். ஆனால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
தமிழினம் பலியாகி விடக்கூடாது
தமிழினத்தை சாதி-மதத்தால் பிரிக்க சிலர் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கு தமிழினம் பலியாகி விடக்கூடாது. அனைவரையும் உள்ளக்கிய திராவிட மாடல் வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவில் முதலிடம் பெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்பு
விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அரசின் தலைமை ஹாஜி முகமது சலாவுதீன் ஆயூப், உலமாக்கள் சபை பொதுச்செயலாளர் இலியாஸ், சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், டாக்டர் ரேலா ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் முகமது ரேலா, நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story