பொருளாதார நெருக்கடி: இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் தனுஷ்கோடி வருகை


பொருளாதார நெருக்கடி: இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் தனுஷ்கோடி வருகை
x
தினத்தந்தி 25 April 2022 9:16 AM IST (Updated: 25 April 2022 10:57 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து மேலும் 3 சிறுவர்கள் உட்பட 15 இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

தனுஷ்கோடி,

இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இலங்கை அரசாங்கத்தின் கையில் நிதியில்லாததால், கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. 

அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், வெளிநாட்டிலிருந்து எதையும் இறக்குமதி செய்யமுடியாத சூழ்நிலையில், எல்லா விலையும் விண்ணுக்கு எகிறிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கோஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இதன் காரணமாக அங்குள்ள மக்கள் படகின் மூலம் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் இருந்து மேலும் 3 சிறுவர்கள் உட்பட 15 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள கோதண்டராமர் கோவில் பகுதிக்கு பைபர் படகின் மூலம் அவர்கள் அகதிகளாக வந்துள்ளனர். 

இதையடுத்து அப்பகுதியிலுள்ள மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மரைன் போலீசார் கடலோர காவல் நிலையத்தில் விசாரித்த பிறகு அவர்கள் மண்டபர் பகுதிக்கு அனுப்பிவைக்கப்படுவர். 

பின்னர் மறுவாழ்வு முகாமில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர். அங்கு அவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் மூலம் அத்தியாவசிய உதவிகள் செய்துகொடுக்கப்பட உள்ளது.


Next Story