தஞ்சாவூர்: மதுகடத்தலுக்கு சாதகமாக செயல்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
மதுகடத்தலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அரசு மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தியதாக மணிமுடி என்பவர் மீது திருவையாறு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் வழக்குப்பதிவு செய்தார்.
இந்த நிலையில், சப் இன்ஸ்பெக்டர் ஞானமுருகன், கடத்தப்பட்ட வாகனம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடத்தலில் ஈடுபட்ட மணிமுடிக்கு சாதகமாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த விசாரணையின் அடிப்படையில் திருவையாறு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஞானமுருகனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story