பல்கலை. துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் சட்ட மசோதா - சட்டப்பேரவையில் இன்று தாக்கல்?
பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் வகையில் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை,
தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய, மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் உதகையில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமணம் தொடர்பான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்கிறார்.
மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் வகையிலும், துணை வேந்தர் நியமணங்களில் கடைபிடிக்கக்கூடிய நடைமுறைகளில் கொண்டுவரப்பட வேண்டிய மாறுதல் உள்பட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கேள்வி நேரம் முடிந்ததும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த மசோதவை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த மசோதா இன்றே நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story