பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்டு


பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 25 April 2022 12:56 PM IST (Updated: 25 April 2022 12:56 PM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பப்ஜி மதன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை,

ஆன்லைன் விளையாட்டுகளில் ஆபாசமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2021 ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் அவருக்கு எதிராக பண மோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்த நிலையில், பப்ஜி மதனை சைபர் சட்ட குற்றவாளி என அறிவித்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். 

இந்நிலையில், தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில், பப்ஜி மதனின் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 


Next Story