சிறப்பு கிராம சபை கூட்டம்
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பரிக்கல்பட்டு கிராம பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பரிக்கல்பட்டு கிராம பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பாகூர் வேளாண்துறை அதிகாரி பரந்தாமன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் ஆராய்ச்சி குப்பம், பரிக்கல்பட்டு, கொமந்தான்மேடு குடியிருப்பு பகுதியில் குடிநீர், சாலை, மின் வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு விளையாட்டு திடல் அமைத்து தர வேண்டும். சுத்தமான குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல் பாகூரில் உள்ள 13 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.
Related Tags :
Next Story