கார் மோதி முதியவர் பலி
சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவிலை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). சம்பவத்தன்று இவர் பரிக்கல்பட்டு பால் அங்காடியில் பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். முள்ளோடை அருகே கடலூர்-புதுச்சேரி சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story