பிள்ளைகள் கவனிக்காததால் கோவிலில் பிச்சை எடுக்கும் டாக்டர் மனைவி...!
வேலூர் அருகே பிள்ளைகள் கவனிக்காததால் டாக்டர் மனைவி கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார்.
காட்பாடி,
வேலூர் மாவட்டம் காட்பாடி சந்திர கணபதி நகரை சேர்ந்தவர் கெஜலட்சுமி (வயது 70). இவர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
அவர் அளித்த மனுவில் கூறியதாவது,
எனது கணவர் ஹோமியோபதி டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். எனக்கு ஒரு மகன் 3 மகள்கள் உள்ளனர். வீடு மற்றும் சொத்துக்களை வாங்கிக் கொண்டு எனது பிள்ளைகள் என்னை கவனிக்க மறுக்கின்றனர்.
உணவு உடை ஆஸ்பத்திரி செலவுக்கு கூட பணம் தருவதில்லை. இதனால் வாழ வழியில்லாமல் வெட்டுவானம் கோவில் பகுதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளேன். என்னை கவனிக்காமல் நடுத்தெருவில் விட்ட என்னுடைய பிள்ளைகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story