காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை


காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2022 11:16 PM IST (Updated: 25 April 2022 11:16 PM IST)
t-max-icont-min-icon

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்துக் கொண்டார்.

மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். எலக்ட்ரீசியன். இவரது மனைவி இந்திராணி (வயது 40). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் இருவருக்கும் தகராறு ஏற்படவே மனமுடைந்த இந்திராணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இந்திராணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story