பேராசிரியரை பெண்ணுடன் சேர்த்து வைத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேர் கைது..!


பேராசிரியரை பெண்ணுடன் சேர்த்து வைத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேர் கைது..!
x
தினத்தந்தி 26 April 2022 8:27 AM IST (Updated: 26 April 2022 9:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட பேராசிரியரை பெண்ணுடன் சேர்த்து வைத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்:

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 60 வயதான பேராசிரியர் ஒருவர், தரமணியில் உள்ள மத்திய அரசின் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவர், கோயம்பேட்டை சேர்ந்த ராதா (வயது 40) என்பவருக்கு ரூ.4½ லட்சம் கடன் கொடுத்தார். ஆனால், அந்த பணத்தை திருப்பி தராததால் ராதா மீது 2019-ம் ஆண்டு சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு ராதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதை அறிந்த ராதா, தொலைபேசி மூலம் பேராசிரியரை தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டார். பின்னர் பணத்தை திரும்பத் தருவதாக கூறி, கொடுங்கையூரில் உள்ள தனது தோழி புஷ்பா வீட்டுக்கு அழைத்தார்.

அதை நம்பி அங்கு சென்ற பேராசிரியருக்கு குடிநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதை குடித்து மயங்கிய பேராசிரியரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, லட்சுமி என்ற பெண்ணுடன் அவரை சேர்த்து வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்தார்.

பின்னர், அந்த வீடியோவை காட்டி இனிமேல் பணத்தை திருப்பி கேட்டால், இந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என பேராசிரியரை ராதா மிரட்டினார். 

இதுபற்றி பேராசிரியர் அளித்த புகாரின்பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மற்றும் அவரது தோழி புஷ்பா(49), இதற்கு உடந்தையாக இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த லட்சுமி(30), அவருடைய கணவர் முருகன்(40) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story