பாலியல் தொல்லை: சிறுமியை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை..!


பாலியல் தொல்லை: சிறுமியை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை..!
x
தினத்தந்தி 26 April 2022 11:52 AM IST (Updated: 26 April 2022 11:52 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்து அறுத்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2018 ஆம் ஆண்டு 8ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த போது அதேபகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதுதவிர, குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விசாராணையின் போது  தினேஷ்குமார், என்னை கொன்று விடுங்கள்..! தூக்கில் போடுங்கள்..! என்றும், சினிமா பார்த்து பெரிய தவறை செய்துவிட்டேன் என்றும் கண்ணீர்மல்க புலம்பியதை காணமுடிந்தது.

இந்நிலையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர் தினேஷ் குமாருக்கு இன்று தூக்குத் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு  தீர்ப்பு அளித்து உள்ளது.

Next Story