விராலிமலை ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள்


விராலிமலை ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள்
x
தினத்தந்தி 26 April 2022 3:15 PM IST (Updated: 26 April 2022 3:15 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன், பெரிய கொம்பன் ஆகிய இரண்டு காளைகளும் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

வாடிவாசலில் இருந்து 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சுமார் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன், பெரிய கொம்பன் ஆகிய இரண்டு காளைகளும் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 

அப்போது மாட்டை அடக்கியது தொடர்பாக மாடுபிடி வீரர்களுக்கும், விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும், விழா கமிட்டியினரும் அவர்களை சமரசம் செய்ததையடுத்து, போட்டி தொடர்ந்து நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏழு வீரர்களுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன. 

Next Story