முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


முந்திரி பழத்திலிருந்து ஊட்டச்சத்து பானம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
x
தினத்தந்தி 26 April 2022 6:29 PM IST (Updated: 26 April 2022 6:29 PM IST)
t-max-icont-min-icon

வாழை மரப்பட்டைகள், நார்கள் வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னை,

முந்திரி பழத்தில் இருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

உறுப்பினர் பன்ருட்டி வேல்முருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், உற்சாக பானம் இல்லாவிட்டாலும், ஊட்டச்சத்து பானம் தயாரிக்க வேண்டும் என்று உறுப்பினர் கூறுவதாக குறிப்பிட்டார்.

ஆலை அமைப்பது தொடர்பாக முந்தைய திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 


Next Story