பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற கேரள வாலிபர் கைது


பெங்களூருவில் போதைப்பொருள் விற்ற கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 April 2022 9:37 PM IST (Updated: 26 April 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் வாடிக்கையாளர்களிடம் இருந்து பிட்காயின் மூலம் பணம் வாங்கியதும் தெரியவந்து உள்ளது.

பெங்களூரு:

கேரள வாலிபர் கைது

  பெங்களூரு ஹெண்ணூர் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் ஹெண்ணூரில் ஒரு வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அந்த வீட்டில் இருந்து போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

  மேலும் அந்த வீட்டில் இருந்த ஒரு வாலிபரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் முகமது ரார் (வயது 27) என்பதும், அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதையும் போலீசார் கண்டுபிடித்தனர். டார்க்வெப் இணையதளம் மூலம் போதைப்பொருட்களை வாங்கும் முகமது அதை தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்து உள்ளார்.

பிட்காயின் மூலம்...

  வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை நேரடியாக வாங்காமல் பிட்காயின் மூலம் முகமது வாங்கி வந்து உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. கைதான முகமதுவிடம் இருந்து 49.30 கிராம் எடையுள்ள 90 போதை மாத்திரைகள், 5 கிராம் எம்.டி.ஏ. பறிமுதல் செய்யப்பட்டது.

 இதன்மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும். இதுதவிர ஒரு மடிக்கணினி, செல்போன், எடை எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான முகமது மீது ஹெண்ணூர் போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story