எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வு ரத்து
எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ படிப்பில் புதுச்சேரி மாணவர்களுக்கு கூடுதலாக 17 இடங்கள் கிடைத்துள்ளது.
எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ படிப்பில் புதுச்சேரி மாணவர்களுக்கு கூடுதலாக 17 இடங்கள் கிடைத்துள்ளது.
மருத்துவ படிப்பு
புதுவை மருத்துவ கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் புதுச்சேரி குடியுரிமையை பயன்படுத்தி சேர்ந்ததால் தங்களுக்கு கிடைக்கவேண்டிய எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்காமல் போனதாக மாணவ, மாணவிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள 4 இடங்களை புதுவை மாணவர்களுக்கு வழங்கி கலந்தாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த கலந்தாய்வு நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டு அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் இடங்கள்
மேலும் சட்டப்படிப்பில் காலியாக உள்ள 2 இடங்கள், கால்நடை மருத்துவ படிப்பில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கிடையே கால்நடை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை 80 இடத்திலிருந்து 100 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த இடங்களுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுகுறித்த முழு விவரங்களும் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளது.
Related Tags :
Next Story