தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

கூலி தொழிலாளி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கிருமாம்பாக்கம் அடுத்துள்ள மணப்பட்டு சாலை கன்னியக்கோவிலை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரமேஷ் நுரையீரல் தொற்று காரணமாக ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார். மேலும் காலில் நரம்பு பிரச்சினை இருப்பதால் வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்று வலியும் இருந்துள்ளது. 
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், நேற்று  இரவு வீட்டில் அனைவரும் படுத்து தூங்கிய பிறகு, மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.    இது குறித்து அவரது மனைவி விஜயலட்சுமி கிருமாம்பாக்கம்   போலீசில்    அளித்த  புகாரின்பேரில்    போலீசார் வழக்குப்பதிவு      செய்து   விசாரித்து வருகின்றனர்.


Next Story