சொகுசு காரில் கடத்திய 1,300 மது பாட்டில்கள் பறிமுதல்


சொகுசு காரில் கடத்திய 1,300 மது பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 April 2022 11:30 PM IST (Updated: 26 April 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் இருந்து தமிழகத்திற்கு சொகுசு காரில் கடத்திய 1,300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

புதுவையில் இருந்து தமிழகத்திற்கு சொகுசு காரில் கடத்திய 1,300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
புதுச்சேரி முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார்  இன்று மதியம் மரப்பாலம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் நோக்கி வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை செய்தனர்.
ஆனால் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். 
டிரைவர் கைது
அப்போது காரில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 27 பெட்டிகளில் 1,296 குவாட்டர் பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த அசோக் (வயது 38) என்பதும், தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story