குடும்ப தகராறில் விபரீதம் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை
குடும்ப தகராறில் வீட்டில் கணவனும், மனைவியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மேனகா (38). இவர் தையல் வேலை செய்து வந்தார்.
மேனகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது. அவருடைய முதல் கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் இரண்டாவதாக ராதாகிருஷ்ணனை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை.
தீக்குளித்து தற்கொலை
கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை கணவனும், மனைவியும் வீட்டில் இருந்தனர். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் திடீரென இருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். இதில் உடல் கருகி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Tags :
Next Story