4½ ஆண்டுகளாக நடந்து வந்த ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை நிறைவு
ஜெயலலிதா மரணம் குறித்து சுமார் 4½ ஆண்டுகளாக நடந்து வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது. ஆணையம் தனது இறுதி அறிக்கையை ஜூன் மாதம் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளது.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
இதன்பின்பு அ.தி.மு.க.வில் திடீர் பூகம்பம் ஏற்பட்டு 2 அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார்.
ஆறுமுகசாமி ஆணையம்
இதற்கிடையே இரு அணிகளுக்கு இடையே சமரசம் ஏற்பட்டது. இதன்பின்பு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னை எழிலகம் கலச மகாலில் ஆணையம் செயல்பட தொடங்கியது. ஜெயலலிதா மரணம் குறித்து யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் மனு அளிக்கலாம் என ஆணையம் அறிவித்தது.
அதன்படி, 100-க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்தனர். அவ்வாறு மனு அளித்தவர்களில் ஜெயலலிதா மரணம் குறித்து ஓரளவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என கருதிய 8 பேரை மட்டுமே ஆணையம் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது.
ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை
அதன்படி, இந்த விசாரணை 2017-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி தொடங்கியது. மற்றபடி யார், யாரிடம் விசாரணை நடத்தினால் உண்மையை வெளிக்கொணர முடியும் என ஆணையம் கருதியதோ அவர்களுக்கெல்லாம் ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது.
அந்த வரிசையில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.
அதேபோன்று ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள் என மொத்தம் 159 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.
எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரிக்கை
ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்ய இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவை பரிசீலித்த ஆணையம், புகழேந்தி தனது வாக்குமூலத்தை ஆணையத்தில் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.
அதன்படி நேற்று ஆணையத்தில் புகழேந்தி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லாதது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
விசாரணை நிறைவடைந்தது
சுமார் 1 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதுவரை மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் நேற்றுடன் விசாரணை நிறைவு பெற்றதாக ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன்மூலம் சுமார் 4½ ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆணையத்தின் விசாரணை நேற்றுடன் நிறைவடைந்தது.
விசாரணை நிறைவு பெற்றதாக ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதன் மூலம் ஜெயலலிதா மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடைபெற வாய்ப்பு இல்லை என தெரிகிறது.
இன்று (புதன்கிழமை) முதல் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை ஆணையம் தொடங்குகிறது. ஜூன் மாதம் 24-ந் தேதியுடன் ஆணையத்தின் காலஅவகாசம் முடிவடைகிறது. அதற்குள் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்கள் எய்ம்ஸ் குழுவால் ஆய்வு
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 6 பேர் கொண்ட எய்ம்ஸ் டாக்டர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழு ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றது. இந்த குழுவுக்கு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்கள், ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் அளித்த வாக்குமூலங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்கள் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதா? என்பதை இந்த குழு ஆய்வு செய்து ஒரு மாதத்துக்குள் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளது. இந்த அறிக்கையையும் பரிசீலித்து ஆணையம் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
நீதிபதி ஆறுமுகசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு
நேற்று நடந்த இறுதி விசாரணையின்போது சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன், அப்பல்லோ தரப்பு வக்கீல் மைமூனாபாஷா ஆகியோர் பங்கேற்றனர். விசாரணைக்கு பின்பு அவர்கள் இருவரும், ஆணையத்தின் விசாரணை திருப்தியாக இருந்ததாக நிருபர்களிடம் தெரிவித்தனர்.
ஆணையம் விசாரணையை தொடங்கிய ஓராண்டில் மட்டும் 154 நாட்கள் விசாரணை மேற்கொண்டு 147 பேரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தது. அதேபோன்று விடுமுறை நாளான பல சனிக்கிழமைகளிலும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அப்பல்லோ தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மேற்கண்ட விவரத்தை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி நீதிபதி ஆறுமுகசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story