திருச்சி: லிப்ட் கேட்டு போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 பேர் கைது..!
திருச்சி அருகே லிப்ட் கேட்பது போல் பைக்கை மறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் நொச்சியம் அருகே அத்தாணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் முருகானந்தம் (வயது 27) என்ற வாலிபர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை மறித்து லிப்ட் கேட்கவே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த செல்போன், பணம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்தனர். பின்னர் 3 பேரும் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த ஏ.டி.எம். கார்டு மூலம் அந்த பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் ரூ.53 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது.
உடனே போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, முருகானந்தத்திடம் வழிப்பறி செய்தது. நொச்சியம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 21), சக்கரவர்த்தி (21), மற்றும் நந்தகுமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story