தஞ்சை தேர் திருவிழா விபத்து: சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முடிவு..!
தஞ்சை தேர் திருவிழா விபத்து தொடர்பாக சட்டபேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
சென்னை,
தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் தேர் வந்த போது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தஞ்சை தேர் திருவிழா விபத்து தொடர்பாக சட்டபேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சட்டபேரவையில் உள்ள அனைத்துக்கட்சிகளின் சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக திருவையாறு எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story