மாமல்லபுரத்தில் பசுமை பாரம்பரிய திட்டத்தில் பெண்களே ஓட்டும் பேட்டரி வாகனம்
மாமல்லபுரத்தில் பசுமை பாரம்பரிய திட்டத்தை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்து பெண்களே ஓட்டும் பேட்டரி வாகனத்தில் பயணித்தார்.
மாமல்லபுரம்:
"மாமல்லபுரம் ஒரு பசுமை பாரம்பரியம்" என்ற திட்டத்தின் பெயரில் 3.76 கோடி ரூபாய் மதிப்பில் மாமல்லபுரத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் பணிகள் துவங்க உள்ளது. இந்த பசுமை பாரம்பரிய மேம்பாட்டு திட்டத்தை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் குத்து கடற்கரை கோயில் வளாகத்தில் விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முதியோர்கள், மாற்றுதிறனாளிகள் வசதிக்காக, பெண்களே இயக்கும் மூன்று பேட்டரி வாகனங்களை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். திட்டத்தை செயல்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்தை நியமித்து, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இவ்விழாவில் தொல்லியல்துறை தென் மண்டல இயக்குனர் மகேஸ்வரி, சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, திட்ட செயலர்கள் தபாசிஷ் நியோகி, கல்பனா சங்கர், இஸ்மாயில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் உள்ளூர் பொது மக்கள் சுற்றுலா வழிகாட்டிகள், பயணிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story