7ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது நபர் கைது..! மேலும் ஒருவருக்கு வலைவீச்சு..!


7ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது நபர் கைது..! மேலும் ஒருவருக்கு வலைவீச்சு..!
x
தினத்தந்தி 27 April 2022 1:04 PM IST (Updated: 27 April 2022 1:04 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே 7 ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவரது தாய் மகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டு வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் வேட்டவலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை செய்யும் மார்பின் சீரி (வயது 25) என்பவன் வீட்டில் தனியாக இருந்த 13 வயது மாணவியை வீட்டின் மாடி மீது வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் உடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவனும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் வேதனை அடைந்த அந்த மாணவி திருவண்ணாமலை குழந்தைகள் காப்பக மையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில் அந்த மாணவியை மீட்டு திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் மாணவி தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இது சம்பந்தமாக குழந்தைகள் காப்பக நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் 17 வயது நபரை கைது செய்து உள்ளனர்.

மேலும் தப்பி ஓடிய மார்பின் சீரியை போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் வேட்டவலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Next Story