மாணவர்கள் செயல் குறித்து டி.ஜி.பி. வெளியிட்ட காணொளி பதிவின் எதிரொலி - பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட அரசு பள்ளி மாணவர்கள்...!
தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்ட காணொளி பதிவின் எதிரொலியாக கோபி அருகே அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
கோபி,
தமிழகத்தில் கடந்த சில நாட்கக ளாஅரசு பள்ளி மாணவர்கள் பள்ளி ஆசிரியரை தாக்குவது போலவும், அரசு பள்ளி சொத்துகளை சேதப்படுத்துவது போல காணொளிகள் சமூக வளையதலங்களில் பரவி அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,
இது சம்பங்களை குறிப்பிட்டு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பள்ளியில் உள்ள அனைத்தும் நம்முடைய சொத்து அதனை நாம்தான் பாதுகாக்க வேண்டும் எனவும், இது போன்ற சம்பவங்களில் அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபட கூடாது எனவும் நானும் அரசு பள்ளியில் படித்தவன் தான் என அவர் கூறியிருந்தார்.
இந்த காணொளி சமூக வளையதலங்களில் வேகமாக பரவியதையடுத்து அதனை முன்னுதாரணமாக எடுத்து ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் 6 முதல் 9 ம் வகுப்பு பயிலும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிவளாகத்தில் புதிதாக மரங்கைள நட்டும், ஏற்கனவே நடப்பட்டுள்ள மரங்களுக்கு எண்கள் இடப்பட்டு தல 1 மாணவருக்கு 1 மரம் என தத்தெடுத்துக் கொண்டனர்.
இந்த மரங்களை 12-ம் வகுப்பு வரை படித்து முடித்து செல்லும் மாணவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க அறிவுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, காலை இறைவணக்கத்தின் போது கைணீர்யில் தண் கேன்களுடன் வந்த மாணவ-மாணவிகள் அரசு பள்ளி நமது சொத்து. வகுப்பறையில் உள்ள பொருட்கள் மற்றும் வளாகத்தில் உள்ள விளையாட்டு பொருட்களையும் சேதப்படுத்த மாட்டோம்.
மரங்களை பாதுகாப்போம். ஒவ்வொருவரும் மரம் ஒன்றை தத்தெடுத்து 12-ம் வகுப்பு படித்து முடிக்கும் வரை அதனை பராமரிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story