திண்டுக்கல்: கூடுதல் கல்வி கட்டணம் வசூல்..? - அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்...!


திண்டுக்கல்: கூடுதல் கல்வி கட்டணம் வசூல்..? - அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்...!
x
தினத்தந்தி 27 April 2022 4:30 PM IST (Updated: 27 April 2022 4:23 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கூடுதல் கல்வி கட்டணம் வசூல் செய்வதாக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கே.ராமநாதபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது.இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுபுவரை 1,300-க்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

அரசு பள்ளிகளில் கொரோனா காலத்தில் சேர்க்கை கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

இந்த கல்வி ஆண்டு ஒரு சில மாதங்களே பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சேர்க்கை கட்டணம் ரூ.50 மட்டுமே வசூலிக்கலாம் என்று தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

ஆனால் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் அரசின் உத்திரவை மீறி பள்ளிக்கட்டணம் என்ற யெரில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.150 முதல் ரூ.450 வரை பள்ளியில் வசூலித்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் வசூலித்த கட்டணத்தை திரும்ப வழங்கவேண்டும். மேலும் மாணவர்களிடம் வசூலித்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி முன்பு வேடசந்தூர்-கோவிலூர் சாலையில் மாணவ, மாணவிகள் திடீர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியல் செய்த மாணவ, மாணவிகளை மறியல் போராட்டத்தை கைவிட கூறினார்கள். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை பள்ளி வளாகத்திற்குள் அமரவைத்து போலீசார் அறிவரை கூறினர்.

அப்போது, பள்ளியில் பிரச்சினை என்றால் முறையாக பெற்றோர்களிமும், கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்யவேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் போலீசார் வழக்குப்பதிவு செய்தால் எதிர்கால கல்வி பாதிக்கப்படும் எனவே படிக்கின்ற காலத்தில் இதுபோல போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் கவனத்தை செலுத்துங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளி மாணவ-மாணவிகளின் இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் கூறுகையில்,

பள்ளியில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் மற்றும் ஒரு ஆசிரியர் ஆகியோர் தற்காளிக பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக பெற்றோர் ஆசிரியர் கழக ஒப்புதலுடன் 6 முதல் 10-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.50-ம் 11 மற்றும் 12-ம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.100 பெறப்பட்டது. அதிகமாக எந்த தொகையும்பெறவில்லை. 

வேண்டும் என்றே சக ஆசிரியர்களின் துண்டுதலின் பேரில் மாணவர்கள் பிரச்சினை செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story