தஞ்சை தேர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சசிகலா நேரில் ஆறுதல்
தஞ்சை, களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற சசிகலா களிமேடு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story