குழந்தைகள் நலன் குறித்த ஆலோசனை கூட்டம்
மரக்காணத்தில் குழந்தைகள் நலன் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் வட்டார குழந்தைகள் நல அமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் தலைவர் ரவிச்சந்திரன், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணன், தொழிலாளர் நல வாரிய ஆய்வாளர் திவ்யா, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார்.
குழந்தைகள் திருமணம் ஒழிப்பு, குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, பெண் குழந்தைகளின் பிரச்சினைகள் மற்றும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், குழந்தைகள் நல அலுவலர்கள், சைல்டு லைன் அமைப்பினர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வெளியிடப்பட்டது.
Related Tags :
Next Story