தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை,
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அந்த வகையில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தின் முக்கிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக நெல்லை கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள், பஸ்-ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
ரெயில் நிலையத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு மருத்துவ குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், பயணிகளுக்கு தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள சுகாதார நிலையங்களிலும் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
Related Tags :
Next Story