உலக பூமி தின விழா
வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் உலக பூமி தின விழா கொண்டாடப்பட்டது.
அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், தாளாளர் ராமச்சந்திரன் வழிகாட்டுதல் படி உலக பூமி தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தேசிய தொழில்நுட்ப கல்வி அமைப்பின் புதுச்சேரி பிரிவு தலைவர் விஜயகிருஷ்ண ரபாகா, அனைத்து இந்திய நிர்வாக சபை உறுப்பினர் ராவ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் கல்லூரி நிர்வாக இயக்குனர் ராஜீவ்கிருஷ்ணா, தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் வித்யா, பொதுமேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கல்லூரி முதல்வர் பிரதீப் தேவநேயன் வரவேற்றார்.
விழாவில் மாணவர்களின் திறன் மேம்பாடு பற்றியும் பூமி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கல்லூரியின் அனைத்து துறை மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி டீன் ஜெயராமன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் அமுதவள்ளி செய்திருந்தார்.
Related Tags :
Next Story