அழகு நிலையத்தில் விபசாரம்; உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
புதுச்சேரியில் அழகு நிலையத்தில் விபசாரம் நடந்தது தொடர்பாக உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 அழகிகளை போலீசார் மீட்டனர்.
புதுச்சேரியில் அழகு நிலையத்தில் விபசாரம் நடந்தது தொடர்பாக உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3 அழகிகளை போலீசார் மீட்டனர்.
அழகு நிலையம்
புதுச்சேரி உருளையன்பேட்டை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ராஜாநகர் அய்யனார் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் கீழ் தளத்தில் அழகு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு விபசாரம் நடப்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார் அழகுநிலையத்தில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
2 பேர் கைது
இதுதொடர்பாக அழகுநிலைய உரிமையாளர் கோவிந்த சாலையை சேர்ந்த அய்யம்பெருமாள் (வயது 64) மற்றும் வாடிக்கையாளர் விழுப்புரம் கந்தசாமி நகரை சேர்ந்த கார்த்திகேயன் (35) ஆகியோரை போலீஸ்சார் கைது செய்தனர். மேலும் 3 அழகிகளையும் மீட்டனர்.
அந்த அழகு நிலையத்தில் இருந்து ஒரு செல்போன், ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது . பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story