புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து


புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து
x
தினத்தந்தி 28 April 2022 10:58 PM IST (Updated: 28 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை ஒன்றியக்குழு தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தொள்ளமூர் கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து போக்குவரத்து கழகத்துக்கு வானூர் ஒன்றியக்குழு தலைவர் உஷா முரளி கோரிக்கை வைத்தார். 
அதன்பேரில் திண்டிவனத்தில் இருந்து குன்னம் வரையில் வந்து சென்ற அரசு பஸ், தொள்ளமூர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை ஒன்றியக்குழு தலைவர் உஷா முரளி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முரளி, ராஜி, மாவட்ட பிரதிநிதிகள் இளங்கோவன், மாயகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் அன்புமணி ஒன்றிய கவுன்சிலர் மின்னல் சேகர், ஒன்றிய துணைச் செயலாளர் விசுவநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story