செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
ஏம்பலம் புதுநகர் பகுதியில் வாலிபர் செல்போன் கோபுரத்தில் ஏறி திடீரென தற்கொலை செய்ய போவதாக மிரட்டினார்.
வில்லியனூர் அடுத்த ஏம்பலம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மாரி. இவரது மகன் தேவநாதன் (வயது 27). இன்று இரவு 10 மணி அளவில் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி திடீரென தற்கொலை செய்ய போவதாக மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், கரிக்கலாம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒலி பெருக்கி மூலம் அவரை கீழே இறங்கும் படி வலியுறுத்தினர். தனது சொத்தை குடும்பத்தினர் பிரித்து தந்தால் தான் இறங்குவதாக தொடர்ந்து அவர் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி அவரிடம் நைசாக பேசி கீழே இறங்க வைத்தார். அதன்பின்னரே அனைவரும் நிம்மதி பெருமூச்சு வீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story