பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நாளை நடக்கிறது


பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 29 April 2022 12:27 AM IST (Updated: 29 April 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நாளை நடக்கிறது.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

இதை கருத்தில்கொண்டு, மத்திய-மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது வரிகுறைப்பு செய்திடவும், பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்தியும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story