மசோதாக்களின் மீது முடிவெடிக்க கவர்னர்களுக்கு நேர, காலம் எதுவும் கிடையாது - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 April 2022 12:52 AM IST (Updated: 29 April 2022 12:52 AM IST)
t-max-icont-min-icon

மசோதாக்களின் மீது முடிவெடிக்க கவர்னர்களுக்கு நேர, காலம் எதுவும் கிடையாது என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பேரூர்,

கோவையை அடுத்த பேரூரில் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, தேசிய சிந்தனைக்கழகம் (அகில பாரத பிரக்ஞா பிரவக்கின் தமிழக கிளை) இணைந்து தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள், 75-ம் ஆண்டு சுதந்திரதின பெருவிழா ஆகிய முப்பெரும் விழாவை நடத்தியது.

விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

அதன் பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னர்களை தரக்குறைவாக பேசுவதையும், நடத்துவதையும் மாற்றி கொள்ள வேண்டும். துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும், அரசியல் சார்பு இருக்க கூடாது என்பதற்காக தான் துணைவேந்தர்களை கவர்னர்கள் நியமிக்கின்றனர்.

தமிழக அரசுக்கு துணைவேந்தரை தேர்வு செய்வோம் என்று சொல்வதற்கு உரிமையுண்டு. அதே சமயம் கவர்னரும் கருத்து சொல்ல உரிமை உண்டு. கவர்னர்களும், முதல்-அமைச்சர்களும் இணைந்து பணியாற்றினால் மக்கள் பயனடைவார்கள். மசோதாக்களின் மீது முடிவெடிக்க கவர்னர்களுக்கு நேர, காலம் எதுவும் கிடையாது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story