இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி - தக்காளி விலை மேலும் அதிகரிப்பு...!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 அதிகரித்து உள்ளது.
போரூர்,
கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கும், சில்லரை கடைகளில் ரூ.10-க்கும் விற்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்ய வந்ததால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ.10 அதிகரித்து கிலோ ரூ.50-க்கு விற்பனையாகி வருகின்றனது. தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளி விலையால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கோயம்போடு வியாபாரிகள் கூறுகையில்,
கோயம்பேடு மார்கெட்டில் கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு விற்கப்பட்டது. தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக வேலை ஆட்களுக்கு கொடுக்கும் கூலிக்கு கூட விவசாயிகளுக்கு போதிய பணம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மன வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் தக்காளிகளின் வரத்து குறைந்து உள்ளது. வரத்து குறைந்து உள்ளதால் தற்போது தக்காளி விலை அதிகரித்து வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story