மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 63 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 63 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை,
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை சுமார் 63 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கியூபா போன்ற நாடுகள் இன்று மருத்துவத்தில் சிறந்து விளங்கிக் கொண்டிருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் மருத்துவத்திற்கும் கல்விக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் இருந்தாலும் வீடுகளுக்கு தேடிச்சென்று மருத்துவ உதவிகள் வழங்குவது உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த சிந்தாலப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 50 லட்சமாவது பயனாளிக்கு முதல் அமைச்சரே நேரில் வந்து நலம் விசாரித்து மருந்து பெட்டகத்தை வழங்கினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் 60 லட்சமாவது பயனாளி இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தார். தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 63 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.
Related Tags :
Next Story