சென்னை ஐ.ஐ.டி.யில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 182 பேருக்கு பாதிப்பு என தெரிய வந்துள்ளது.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 19-ந் தேதி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஊழியர்கள் 6 ஆயிரத்து 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் முடிவுகள் வரத்தொடங்கியுள்ளது. இதனால், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மேலும் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம் ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 182- ஆக அதிகரித்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொற்றுக்குள்ளான மாணவா்களில் நான்கு பேர் சின்னம்மை, டெங்கு, டைபாய்டு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story