இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை கடையில் தீ விபத்து...!


இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை கடையில் தீ விபத்து...!
x
தினத்தந்தி 29 April 2022 2:22 PM IST (Updated: 29 April 2022 2:22 PM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து உள்ள மேல்செங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் போச்சம்பள்ளியில் திருப்பத்தூர் சாலை அருகே இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை விற்பனை செய்யும்  கடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் இரவு கடையே பூட்டி விட்டு சென்றுள்ளார்.  திடீரென நள்ளிரவு பலத்த சதங்களுடன் கடையின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயில் கேன்கள் தீப்பற்றி வெடிக்கத் துவங்கியது.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள்ளாக கடையின் முன் பகுதியில் இருந்த டயர்கள், ஆயில் கேன்கள், உதிரி பாகங்கள் என ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இந்த தீ விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story