ராஜபாளையம்: பெண் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை..!


ராஜபாளையம்: பெண் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை..!
x
தினத்தந்தி 29 April 2022 8:34 PM IST (Updated: 29 April 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக பெண் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). தனியார் ஏடிஎம் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாப்பாள் (34) என்ற மனைவியும் 9 ம் வகுப்பு பயிலும் சுபாஸ்ரீ, 7ம் வகுப்பு பயிலும் தென்னரசி, 5 ம் வகுப்பு பயிலும் மாதவி ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 

கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு நடந்த சண்டையை மனதில் கொண்டு பரமசிவம் இன்று காலை வீட்டில் உண்ணாமலும், மதிய உணவு எடுக்காமலும் வேலைக்கு கிளம்பியதாக தெரிகிறது.

இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த பாப்பா சுமார் 11 மணி அளவில் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்த தன்னுடைய மூன்றாவது மகள் மாதவியை பாதியிலே கூட்டி வந்துள்ளார்.

பின்னர் தனது மகளுடன் வீட்டிலிருந்து கிளம்பிய பாப்பா வாழவந்தான் கண்மாய்க்கு செல்லும் வழியில் உள்ள விவசாய தோப்பில் இருந்த படி இல்லாத சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளார்.

உறவினர்கள் இவரை தேடியபோது கிணற்றின் கரையில் இருவரது செருப்புகளும் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தளவாய்புரம் போலீஸ் மூலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தீயணைப்புத்துறையினர் பகல் 2 மணி முதல் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் தேடலுக்கு பிறகு மாலை 5 மணியளவில் சிறுமி மாதவியின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story