வில்லியனூர் அருகே மதுபாரில் கேஷியரை தாக்கி கொலை மிரட்டல்
வில்லியனூர் அருகே மதுபாரில் கேஷியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ரமணன் (வயது 26). இவர் கூடப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மதுபான பாரில் கேஷியராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை பத்துக்கண்ணு அருகே உள்ள தமிழக பகுதியான அம்மணங்குப்பத்தை சேர்ந்த ஆனந்து, கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த சபரி ஆகியோர் பாருக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்தனர். இதனை பார்த்த ரமணன், பாருக்கு உள்ளே வரக்கூடாது, வெளியே செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், ரமணனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். உடனே மற்ற ஊழியர்கள் திரண்டதால், அவர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தகராறு குறித்து ரமணன் வில்லியனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story